பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நாயை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து, தயாரித்த நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றது. தற்போது நாயை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் அன்புள்ள கில்லி.
புதுமுகம் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் , மைம் கோபி, ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிய இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது சாதாரண மிருகம் மட்டுமல்ல, அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள்.
உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை சொல்லும் படமாக இருக்கும். நாயை வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கும். என்றார்.




