ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
மலையாளத்தில் மோகன்லால் - மீனாவை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கிய படம் திரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் ரீமேக் ஆனது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் - கவுதமியை வைத்து ரீமேக் செய்தார் ஜீத்து ஜோசப்.
இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் மோகன்லால் - மீனாவை வைத்து இயக்கிய அவர் தெலுங்கில் வெங்கடேஷ், மீனாவை வைத்து இயக்கினார். ஆனால் தமிழில் பாபநாசம்-2 படத்தை கமலை வைத்து ஜீத்துஜோசப் எப்போது இயக்குவார்கள் என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை அடுத்து கமல் கைவசம் படங்கள் உள்ளன. இருப்பினும் பாபநாசம்-2 படத்தில் கமல் நடிக்கப்போவதாகவே கூறப்படுகிறது.
அதோடு, முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமிக்கும், கமலுக்கு இடையே விரிசல் விழுந்திருப்பதால் அவருக்குப் பதிலாக மீனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது நதியா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளன. அப்படி பாபநாசம்-2 படத்தில் கமலுடன் நதியா நடித்தால் இதுதான் அவருடன் நதியா ஜோடி சேரும் முதல் படமாக இருக்கும். மேலும், திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் தெலுங்கு ரீமேக்கில் ஆஷா சரத் நடித்த ஐபிஎஸ் வேடத்தில் நதியா தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.