பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தனது அறிமுகப்படத்தில் இருந்தே மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தமிழில் அவர் நடித்த இரண்டு ஆந்தாலாஜி படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளன. மேலும் அடுத்தததாக கிருத்திகா உதயநிதியின் டைரக்சனில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ள காளிதாஸ், ‛‛விரைவிலேயே நல்ல சில விஷயங்கள் வரப்போகின்றன” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் நடிகர் சிலம்பரசனையும் டேக் செய்துள்ளார். அனேகமாக யுவனின் இசையில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் காளிதாஸ் ஒரு பாடலை பாடுவார் அல்லது பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது.