இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தான் அவர்களது கவனத்தை பெறுவதற்காக ஏதேதோ சாகசங்களை செய்வார்கள் என்றால், சில நடிகைகளின் ரசிகர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடவே செய்கின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் 900 கிமீ பயணித்து அவரது வீட்டை தேடி வந்துள்ளார்.
ஆனாலும் ராஷ்மிகா தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த ரசிகரின் நோக்கம் நிறைவேறாமல் போனது.. கூகுள் மேப்புடன் ராஷ்மிகாவின் வீட்டை அவர் தேடிக்கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரை அழைத்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி ராஷ்மிகாவின் கவனத்திற்கு வரவே இதுகுறித்து வருத்தப்பட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உங்களில் ஒருவர் என்னை சந்திக்க ரொம்ப தொலைவு பயணித்து வந்ததாக கேள்விப்பட்டேன்.. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். அந்த ரசிகரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிகிறது. தயவுசெய்து இதுபோல யாரும் என்னை தேடி வரவேண்டாம்.. நானே உங்களை நேரில் சந்திக்கும் ஒருநாள் வரும். அப்போது சந்திப்போம்” என கூறியுள்ளார்..