ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கான தளர்வுகள் ஒவ்வொரு வாரத்திற்குமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில், ஜுலை 5ம் தேதி வரையிலான தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தியேட்டர்கள் திறப்பு குறித்து எந்தவித அம்சமும் இடம் பெறவில்லை.
கடந்த வார தளர்வுகளில் அறிவிக்கப்பட்ட படப்பிடிப்புக்கான அனுமதி, தியேட்டர்கள் பராமரிப்புக்கான அனுமதி ஆகியவை மட்டும் இந்த வாரமும் தொடர்கின்றன. தியேட்டர்களைத் திறக்க மாநில அரசு அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த திரையுலகினர் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய அரசு பதவியேற்ற பிறகு திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் இன்னமும் சம்பந்தப்பட்ட அமைச்சரையோ, முதல்வரையோ சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசாமலேயே உள்ளதாக திரையுலகின் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
சுமார் இரண்டு மாத காலமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 50 படங்களாவது வெளியாகியிருக்கும். மேலும், சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இதனால், தியேட்டர்களைத் திறக்கும் போது படங்களை வெளியிட கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எப்படியும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சில முன்னணி நடிகர்களின் படங்களை ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போதுதான் திரையுலகினருக்கு நம்பிக்கை வரும்.