போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து ஆரம்பமாகியிருப்பது இதுவே முதல் முறையாகக் கூட இருக்கலாம்.
ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். அங்குள்ள பழமையான பங்களா ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சியின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமாகிறது. அதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளார்கள். அஜர்பைஜான் எங்குள்ளது என்பது சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஈரான் நாட்டிற்கு வடக்கில் உள்ள நாடுதான் அஜர் பைஜான். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த ஒரு நாடுதான் இது. காஸ்பியன் கடல் ஒரு பக்கம் உள்ளது.
விரைவில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள அவரது 233வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படங்கள் அனைத்துமே அடுத்தாண்டு நிச்சயம் வெளியாகும். அதனால், அடுத்த ஆண்டில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் ஒரு ஆண்டாக அமையப் போகிறது.