'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ்த் திரையுலகத்தின் நம்பர் 1 நடிகை என கடந்த சில வருடங்களாக புகழின் உச்சியில் இருப்பவர் நயன்தாரா. அவரை தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க வைக்க அங்குள்ளவர்கள் முயற்சித்தாலும் அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். அவரைப் பற்றி எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் அவரது இமேஜ் குறையாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டிலும் வியக்கிறார்கள்.
பொதுவாக, தமிழில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பாலிவுட் சென்று ஹிந்திப் படங்களில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், நயன்தாராவிடம் அந்த ஆசை இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவர் நினைத்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்பே பாலிவுட் சென்றிருக்கலாம், இருந்தாலும் செல்லவில்லை.
இப்போது நயன்தாராவை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆசையில் அட்லீ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கிய 'ராஜா ராணி, பிகில்' இரண்டு படங்களிலும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அடுத்து பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை அட்லீ இயக்க உள்ளார். இப்படத்திற்காகத்தான் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் அட்லீ. அவரது அழைப்பை நயன்தாரா ஏற்றுக் கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.