'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்வரிசை இசைமைப்பாளராகி விட்டார். அதோடு தற்போது தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவர் தற்போது பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறு வயதில் இருந்தே என்னை பாதித்த பல பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றான கில்லி படத்தின் கபடி பாடலை மாஸ்டர் படத்தில் ரீமிக்ஸ் செய்தேன். அதேபோல் விஜய் நடித்த கில்லி படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான அர்ஜூனனின் வில்லு என்ற பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த பாடலையும் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ரீமிக்ஸ் செய்வேன் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.