சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனைக்கு வெளியியில் நின்று கொண்டு மீடியாவுக்கு பேட்டி அளித்த நடிகர் மன்சூரலிகான். தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார். விவேக் உடல்நலம் பாதிக்கப்பட்டது தடுப்பூசியால் தான் என்றும் சொன்னார்.
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்தநிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.