''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகர் விஜய் நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு தமிழ், தெலுங்கு என பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். எல்லாருடைய வாழ்த்துகளையும் விட விஜய்யுடன் 'பைரவா, சர்க்கார்' படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷின் வாழ்த்து ஒரு 'அட்டகாசமான ஆட்டம்' ஆக அமைந்தது.
“தளபதியின் தீவிர ரசிகையாக... 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு நடனம்... நீங்கள் சிறப்பாக பர்பாமன்ஸ் கொடுப்பவர்களில் ஒருவர் மட்டுமல்ல, பொழுதுபோக்கு என்று வந்துவிட்டால் நீங்கள் மட்டுமே பீஸ்ட்” எனக் குறிப்பிட்டு பவன் என்பவருடன் இணைந்து அப்பாடலுக்கு அதிரடியான நடனமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவிட்டார்.
இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும், பேஸ்புக்கில் 1 மில்லியன் பார்வைகளையும், டுவிட்டரில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. லைக்குகள், கமெண்ட்டுகள் வேறு தனி. 24 மணி நேரத்திற்குள்ளாக கீர்த்தியின் இந்த வீடியோ இவ்வளவு பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளது.