'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் தலைவி. பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடந்து முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
ஆனால் படம் ரிலீசுக்கு தயாரான நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்ததால் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் தலைவி தியேட்டரில் தான் வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள தலைவி படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு தணிக்கைக்குழு யு சான்று கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.