விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! |
கொரோனா காலத்தில், தமிழ்நாட்டு நடிகைகள் அட்வைஸ் பண்ணி வீடியோ வெளியிடுவதோடு சரி. ஒரு சிலர் தான் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சிலர் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் நடிகைகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். போதை பொருள் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற ராகிணி, சஞ்சனா கல்ராணி கூட ரோட்டில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளில் இறங்கியவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரணிதாவுக்கும் தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தனது திருமண பரிசாக தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார். இந்த பணியை கணவருடன் இணைந்து தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.