லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
உதயன், சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரணிதா. கடந்த 2021ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு 2022ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து மகளுடன், தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் பிரணிதா. அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படங்கள் மிகப் பெரிய அளவில் கவர்ச்சிகரமாக இருப்பதால் அது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதோடு பிரணிதா பதிவு செய்துள்ள இந்த கர்ப்பகால கிளாமர் புகைப்படங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்கள் கிடைத்திருப்பதோடு, கமெண்டுகளும் குவிந்து வருகிறது.