'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரான விஜய் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தன்னுடைய 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. கொரானோ இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் படக்குழு சென்னை திரும்பியது.
பொதுவாக விஜய் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் போதுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு பேட்டி ஒன்றிலும் வம்சி அது பற்றிய தகவலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த அணுகுமுறை விஜய்க்குப் பிடிக்காதே என அப்போதே கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அதற்கேற்றபடி சில காரணங்களைச் சொல்லி அப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்து விடலாமா என விஜய் யோசிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இங்கேயே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்குத் தயாரிப்பாளரின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற சலசலப்பும் இங்கு எழுந்துள்ளது.
எனவே, தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் விஜய் நடிப்பது மறுபரிசீலனை செய்யப்படும் என்றே தெரிகிறது.