'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தியேட்டர்களில் 200 கோடி வசூலித்ததோடு, அமேசானிலும் வெளியிடப்பட்டு மிகப் பெரிய அளவில் வசூலித்து முதலிடத்தை பெற்றுள்ளது.
அதையடுத்து சில வெப் சீரிஸ்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களை கைப்பற்ற, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடித்த திரிஷ்யம்-2 ஓடிடி தளத்தில் வெளியாகி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்து தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸ் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் தியேட்டரில் 50 சதவிகித இருக்கைகளுடன் நல்ல வசூலை கொடுத்ததோடு,ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்பிறகு பவன்கல்யாண் நடித்து வெளியான வக்கீல் சாப் படம் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில் ஐஎம்டிபி வெளியிட்டுள்ள இந்த டாப் 10 பட்டியலில் திரைப்படங்களுக்கு இணையாக பல வெப்சீரிஸ்களும் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளன.