பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் விருப்பத்தையும் மீறி இப்படம் ஓடிடி தளத்தில் ஜுன் 18ம் தேதி வெளியாக உள்ளது.
நேற்று படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு 'டுவிட்டர் ஸ்பேஸ்' மூலம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் சுமார் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்களாம். அமெரிக்காவிலிருந்து தனுஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது படத்தலைப்பை அறிவிக்காமல்தான் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். அப்போது படத்திற்கு 'சுருளி' என்று தலைப்பு வைத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கும் போது 'ஜகமே தந்திரம்' என்றுதான் வந்தது.
அது பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நேற்று பேசுகையில், “படத்திற்கு 'சுருளி' என்றுதான் தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால், ஒருநாள் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலான 'ஜகமே தந்திரம்....' பாடலைக் கேட்ட போது அதுவே இப்படத்திற்குப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்று நினைத்தேன். நான் ஒரு ரஜினி ரசிகர் என்பதாலும் அதையே வைத்துவிட்டேன்,” என்றார்.