தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
தமிழ் சினிமாவில் பெண் ஒளிப்பதிவாளர்கள் மிகவும் குறைவு. பி.ஆர்.விஜயலட்சுமிக்கு பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து முடித்து பி.சி.ஸ்ரீராமிடம் 5 ஆண்டுகள் வரை உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு நாக் நாக் ஐ ஏம் லுக்கிங் டு மேரி என்ற ஆங்கில படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார்.
இந்தியில் தடுகா, கன்னடத்தில் படவா ராஸ்கல், தமிழில் மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படங்களில் பணியாற்றிவர் இப்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு ஒளிப்பதிவாளர் சினிமாவுக்கானவர் மட்டுமல்ல ஆவணப்படம், குறும்படம், வெப் சீரிஸ், விளம்பர படம், மியூசிக் வீடியோ என நிறைய இருக்கிறது. நல்ல ஒளிப்பதிவாளருக்கு இப்போதும் தேவை இருக்கிறது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களை ஒப்பிடும்போது தொழில்நுட்ப துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண்கள் சினிமா தொழில்நுட்பத்தை நல்ல முறையில் கற்று அந்த பணிக்கு வந்தால் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஆண் பெண் பேதமெல்லாம் மிகவும் குறைந்து விட்டது. என்றார்.