பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிரிங்கேரி பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் '777 சார்லி'. இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. அவர் இதற்கு முன் நடித்த கன்னடத்தில் நடித்த 'அவனே ஸ்ரீமன் நாராயணா' படத்தை மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தார்.
அது போலவே தற்போது '777 சார்லி' படத்தை வெளியிட உள்ளார். இன்று ரக்ஷித்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியாக உள்ள அனைத்து மொழிகளிலும் யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள். தமிழில் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார்.
டீசரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாயை வைத்து சுவாரசியமான ஒரு படத்தை உருவாக்கி இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு பெண் நாய் மலைப் பிரதேசம் ஒன்றிலிருந்து யாரையோ தேடி தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. அதனுடைய பயணத்தை டீசரில் காட்சிகளாக நகர்த்தியிருக்கிறார்கள். காடு, மேடு, மலை, குப்பை, சாலை, ரயில் பயணம், லாரிப் பயணம், மழை என நகர்கிறது. கடைசியில் நாயகன் ரக்ஷித் அந்த நாயைத் தூக்கிக் கொண்டு ஒரு வீட்டிற்குச் செல்கிறார் என்பதுடன் டீசரிலேயே ஒரு குட்டிக் கதையை வைத்திருக்கிறார்கள். அந்த நாயின் பயணம் எதற்காக என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
டீரைப் பார்த்த பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.