பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஷெரீன். அதன்பிறகும் பல படங்களில் நடித்த அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க எடுத்த அவரது முயற்சிகளில் பலன் கொடுக்கவில்லை. இருப்பினும் தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஷெரீன்.
இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த மாதிரியான மாஸ்க் அணிய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷெரீன்.
அந்த வீடியோவில், முதலில் மாஸ்க்கே அணியாமல் ஒரு எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறார். அதன்பிறகு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து ஊதுகிறார். அப்போதும் ஒரேமுறையில் அணைந்து விடுகிறது. அதையடுத்து இரண்டு மாஸ்க் அணிந்து அந்த மெழுகுவர்த்தியை அவர் ஊதி அணைக்கும்போது பல முறை ஊதிய பிறகே அணைகிறது. ஆனால் அதன்பிறகு துணி மாஸ்க்கை அணிந்து அவர் ஊதி அணைக்கும்போது மெழுகுவர்த்தி அணியவே இல்லை. இப்படியொரு செய்முறையை செய்து காட்டி, இரட்டை மாஸ்க் மற்றும் துணி மாஸ்க்கை அணிந்து கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதை புரிய வைத்துள்ளார் ஷெரீன்.