அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் |

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் இளைய மகன் நடிகர் மஞ்சு மனோஜ். இன்று(மே 20) அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க முடிவெடுத்துள்ளார்.
இந்த கொரோனா தொற்றில் தமிழ் நடிகர்கள், நடிகைகளை விட தெலுங்குத் திரையுலகில் பலரும் பலவிதமான உதவிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதைத் தவிர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார் மனோஜ்.
“தங்களது வாழ்க்கையையும், குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் இந்த உலகத்தைக் காக்கப் போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாஸ்க் அணிவது, அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது, உடல் ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது என நம்மை நாமே இந்த உலகத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகளை தருவதற்காக இந்த லாக்டவுனில் எனது பிறந்தநாளில் மக்களை சந்திக்க உள்ளேன். 25 ஆயிரம் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அவர்களிடம் மகிழ்ச்சியைப் பரவ நானும், எனது ரசிகர்களும், நண்பர்களும் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.