இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' |

கேரளாவை பொறுத்தவரை நிபா வைரஸ் தாக்குதல், அதை தொடர்ந்த இரண்டு வருடங்களில் பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு, இதோ தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் என தொடர்ந்து இயற்கை மற்றும் நோய் தாக்குதல்களை மாறி மாறி சந்தித்து வருகிறது. இதில் கேரள அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, சுகாதார விஷயங்களை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜா. அடிப்படையில் பள்ளி ஆசிரியையான இவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றவர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதில் கே.கே.ஷைலஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். இது கேரளா மக்களிடையே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
அதிலும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டாக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. நடிகை மாளவிகா மோகனன், “எதற்காக சைலஜாவை மாற்றினீர்கள், என்ன நடக்குது இங்கே முதல்வரே” என முதல்வர் பினராயி விஜயனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரை தொடர்ந்து நடிகை பார்வதியும் கே.கே.ஷைலஜாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். “கேரளாவில் உள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கே.கே.ஷைலஜா டீச்சர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக நாம் போராடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லையா..? எதை சொல்லியும் இதை நியாப்படுத்தாதீர்கள்.. தங்களுக்கு வேண்டிய தலைவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.. அதை மறந்து விடாதீர்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.
இதேபோல நடிகைகள் ரீமா கல்லிங்கல் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரும் கே.கே.ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்கள்.