தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! |
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கிய பாராட்டையும், தேசிய விருதையும் பெற்ற படம் ‛ஒத்த செருப்பு'. இப்போது பிற மொழியில் வெளியிட உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், ‛‛என் தமிழ் அழகு. என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும், தப்பித்தவறி பிற மொழிகளும் பேச முயன்றதுண்டு. 'ஒத்த செருப்பு' விரைவில் ஹிந்தி, ஆங்கிலம் பேச இருப்பதால், இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒருவர் தேவை. ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்க'' என thebioscopefilmframers@gmail.com என்ற இ-மெயில் முகவரியை பதிவிட்டுள்ளார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மற்றுமொரு டுவீட்டில், தனி உதவியாளர் (Personal Assistant) வேணும்னு கேட்டால், பணமே வேணாம், வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள். அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை. மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி'' என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவு மூலம் இப்படம் விரைவில் ஹிந்தி, ஆங்கிலத்தில் டப்பாகி உலகம் முழுக்க வெளியிடப்பட உள்ளது.