புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த ஆண்டில் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், திருமணத்திற்கும் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை தொடரும் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தற்போது என் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில், 2018ல் இந்தியன்-2விலும், 2019ல் ஆச்சார்யாவிலும் கமிட்டானேன். இந்த படங்கள் இரண்டுமே கொரோனா தொற்றினால் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து துல்கர்சல்மானுடன் ஹேய் சினாமிகா மற்றும் நாகார்ஜூனாவுடன் ஒரு படம், தமிழில் டிகே இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளேன். அந்தவகையில் இப்போதுவரை எனது சினிமா பயணம் பிசியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறேன். ஆனால் இந்த பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும் என்பது எனக்கே தெரியவில்லை. கணவர் அனுமதி கொடுப்பதுவரை நடிப்பேன். அவர் எப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்த சொல்கிறாரோ அப்போது நிறுத்தி விடுவேன். அதனால் எனது சினிமா கேரியர் கைவசம் உள்ள படங்களோடு முடிவடைகிறதா? இல்லை தொடரப்போகிறதா? என்பது என் கணவர் கையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளர் காஜல் அகர்வால்.