கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
சினிமா பிரபலங்கள், குறிப்பாக முன்னணி நடிகைகள் அதிக லைக்ஸ் எப்படி வாங்குவது என்பதன் ரகசியத்தை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் 65 படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார். ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவுகைளைப் போடுவது பூஜாவின் வழக்கம். நேற்று திறந்த முதுகுடன் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் குறுகிய நேரத்திலேயே 12 லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் எந்த ஒரு கருத்தையும் பூஜா பதிவிடவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பூஜா பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் சர்வ சாதாரணமாக 10 லட்சம் லைக்குகளைக் கடப்பது வழக்கம். விஜய் படத்தில் நடித்து முடித்த பின் பூஜா தமிழிலும் அதிக பிரபலமாவார். அதன்பின் லைக்குகள் இன்னும் அதிகமாகும்.