காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கொரோனா இரண்டாவது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர். கே.வி.ஆனந்த்(மாரடைப்பு ப்ளஸ் கொரோனா), பாண்டு, பாடகர் கோமகன் உள்ளிட்டோரை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்த நிதிஷ் வீரா இன்று(மே 17) கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடிக்குழு, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதி உடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(மே 17) காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.
இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான செய்தி வந்த சில மணிநேரங்களில் நடிகர் நிதிஷின் கொரோனா மரணமும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிமாறன் இரங்கல்
‛‛நண்பர் நித்திஷ் வீரா, உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன். 2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள். ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும். அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார். அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும், என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு'' என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இரங்கல்
அமெரிக்காவில் உள்ள தனுஷ் டுவிட்டரில், ‛‛இந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் சகோதரரே'' என பதிவிட்டுள்ளார்.