2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டு வழக்கு மீண்டும் நீதிமன்றம் பக்கமே சென்றது.
இந்தியன் 2' படத்தை முடிக்கும் வரையில் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற லைகாவின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார் ஷங்கர்.
அதனால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம் ஷங்கர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுத்த பிறகே அவர் தெலுங்கு, ஹிந்தியில் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் வடிவேலு மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து அவரை படங்களில் நடிக்க வைக்க விடாமல் மறைமுக அழுத்தம் கொடுத்தவர் ஷங்கர் என கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதே பார்முலாவைப் பயன்படுத்தி ஷங்கரையும் தடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முயல்கிறதாம்.