பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் |
கொரோன 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையுலக பிரமுகர்களை அழைத்து ஆலோசனை செய்தார். இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்துவது, பெப்சி தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.