பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
நடிகர் சோனு சூட், கொரோனா இரண்டாவது அலையிலும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். அவருக்கு பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலரும் நன்கொடை அளித்து அவரை பல உதவிகளைச் செய்ய ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.
தன்னுடைய உதவியின் அடுத்த கட்டமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து குறைந்தது நான்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்ய உள்ளாராம்.
இது குறித்து சோனு சூட் கூறுகையில், “தேவைப்படும் மக்களுக்காக ஆக்சிஜன் உற்பத்தி இயற்திரங்களைக் கொண்டு வர உள்ளோம். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் அவதிக்குள்ளாகும் மக்களை அதிகமாகப் பார்க்கிறோம்.
அவற்றைப் பெற்று, ஏற்கெனவே மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயற்திரங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கு மட்டும் ஆக்சிஜனை வழங்கவில்லை, ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பவும் செய்யும்.
முதல் உற்பத்தி இயந்திரத்திற்கு ஏற்கெனவே ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. அது இன்னும் 10, 12 நாட்களில் வந்துவிடும். இந்த நேரத்தில் காலம் தான் நமக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. அனைத்தையும் முடிந்த வரையில் குறித்த நேரத்தில் கொண்டு வர கடினமாக உழைத்து வருகிறோம். நாம் ஒரு உயிரைக் கூட இழந்துவிடக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.