‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் என பலர் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார். அதன்காரணமாக சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் -நடிகைகள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தங்களாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு சினிமாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பட்டியலில் தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இஸ்பேட் ராணியும் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள இவர் தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வரும் திவ்யா துரைசாமி, சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார். தற்போது புடவையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.




