ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூரலிகான். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் நடிகர் மன்சூரலிகான். சமீபத்தில் நடிகர் விவேக் இறந்தபோது அவரது இறப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று சொல்லி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதையடுத்து அவர் கைதாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றார். மேலும் ரூ. 2 லட்சம் அபராதமும் செலுத்தினார்.
இந்நிலையில் இன்று(மே 10) நடிகர் மன்சூரலிகான் கிட்னியில் கல் அடைப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைக்கான பணிகள் துவங்கி உள்ளன. இன்று அல்லது நாளைக்குள் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.