மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தால் தங்கள் திரையுலகத்திற்கும் புதிதாக நன்மைகள் கிடைக்காதா என திரையுலகினர் எதிர்பார்த்து வருகிறார்கள். முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை திரையுலக சங்கத்தினர் சந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
முந்தைய ஆட்சியில் தியேட்டர்களுக்கான தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால், அதை முந்தைய அரசு கடைசி வரை நீக்கவேயில்லை. தற்போது புதிய அரசு அமைய உள்ள நிலையில் அதை கோரிக்கையாகக் கேட்டுள்ளார்கள்.
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி உண்டு. டிக்கெட் கட்டணத் தொகைக்கேற்ப அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, டிஜிட்டல் நிறுவனங்களுடன் அடிக்கடி தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு பதவியேற்றதும் அவரிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து திரையுலகினர் தனித்தனியாக சந்தித்து கேட்க திட்டமிட்டுள்ளனராம்.
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதற்குள் தங்களது சில கோரிக்கைகள் நிறைவேறினால் நல்லது என நினைக்கிறார்கள்.