ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன.
ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.




