கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” |

தமிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கும் நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் மிக முக்கியமானவர்கள். இவர்களது படங்கள் எவ்வளவு வசூலித்தது, எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதுதான் அவர்களுடைய ரசிகர்களின் வாக்குவாதமாக உள்ளது
தியேட்டர் வசூலில் எப்படியான போட்டி இருக்கிறதோ அப்படியே டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது.
இப்படத்தின் ரேட்டிங் இன்று வெளிவந்தது. அதன்படி அப்படத்தின் தடப்பதிவு 1,37,55,000 ஆக மட்டுமே கிடைத்துள்ளது. 'பிகில்' படத்திற்குக் கிடைத்த ரேட்டிங்கை விடவும் இது குறைவுதான்.
டிவி ரேட்டிங்கைப் பொறுத்தவரையில் இதுவரையில் 'விஸ்வாசம்' படம்தான் 1,81,43,000 தடப்பதிவுகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என்ற கேள்வியும் கடந்த வாரம் எழுந்தது.
இரண்டு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கும் 'விஸ்வாசம்' சாதனையை 'மாஸ்டர்' முறியடித்துவிடும் என்றும் எதிர்பார்த்தார்கள். விஜய், விஜய் சேதுபதி என இரு முக்கிய நடிகர்களின் படம் என்பதும் அதற்குக் காரணமாக இருந்தது. ஆனாலும், எதிர்பார்த்தபடி டிவி ரேட்டிங் அமையவில்லை.
'மாஸ்டர்' படம் ஒளிபரப்பான அதே நேரத்தில் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த போட்டியையும் 'மாஸ்டர்' சமாளிக்க முடியாமல் போயிருக்கிறது.
டாப் டிவி ரேட்டிங் பெற்ற படங்கள்
விஸ்வாசம் - 1,81,43,000
பிச்சைக்காரன் - 1,76,96,000
சர்க்கார் - 1,69,06,000
சீமராஜா - 1,67,66,000
பிகில் - 1,64,73,000