தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகளையும், ஞாயிற்றுக் கிழமை காட்சிகளையும் நடத்த முடியாது.
இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், புதிய ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் பாதிக்கப்படும். எனவே, தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம் என்றும், அது குறித்து விவகாதிக்க உள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.
அதன்படி இன்று ஜும் மீட்டிங்கை தியேட்டர்காரர்கள் நடத்தி உள்ளார்கள். கூட்டத்தின் முடிவில் தியேட்டர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இரு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களை மூடுவோம் என்றவர்கள் இன்று அவர்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
இருந்தாலும் நேற்று முதலே தியேட்டர்களுக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு பகல் நேரங்களில் வருவதைக் கூட நாளை முதல் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய புதிய படங்கள் ஏற்கெனவே அவர்களது வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ள நிலையில், இந்த வாரம் சிறிய படங்கள் வெளிவந்தால் அவற்றைப் பார்க்க மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம் தான்.
மீண்டும் கடந்த வருட நவம்பர் மாத சூழ்நிலையே தற்போது திரும்பி வரும் என தியேட்டர்காரர்கள் மத்தியில் ஒரு அச்சம் எழுந்துள்ளதும் உண்மை.