தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில் கமலை வைத்து இயக்குனர் ஷங்கர் துவங்கிய இந்தியன்-2 படத்தின் படிப்பிடிப்பு இடையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, தேர்தலில் கமல் தீவிரமாக இறங்கியது உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து ஷங்கர், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிகளில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்குவதாக அறிவித்து விட்டார். அந்தவகையில் தெலுங்கில் ராம்சரணை வைத்து, அவர் இயக்கப்போகும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்தநிலையில் இந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற ஒரு தகவலும் தற்போது சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது. விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதாலும், படத்துக்கு படம் சுரேஷ்கோபி, அக்சய் குமார் என மற்ற மொழியில் உள்ள பிரபல நடிகர்களை, ஷங்கர் வில்லனாக மாற்றி பயன்படுத்தி வருவதாலும், இந்த செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு என்றே சொல்லப்பட்டு வருகிறது.