லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகத்தில் மாடர்ன் ஆன நடிகை எனப் பெயரெடுத்தவர் ஆண்ட்ரியா. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தைத் தன் பக்கம் வைத்திருக்கிறார். அவர் பாடிய பாடல்களுக்கும் ரசிகர்கள் தனியாக இருக்கிறார்கள்.
நேற்று மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பற்றி பலரும் தங்களது இரங்கலையும், அவருடனான அவர்களது பயணத்தைப் பற்றியும் அவரவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். அவற்றில் ஒரு சில உணர்வு பூர்வமான பதிவாக இருந்தன.
அந்த விதத்தில் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டதும் அமைந்துள்ளது. இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் மாடலிங்கிலிருந்து தான் சினிமாவிற்குள் வந்தார் ஆண்ட்ரியா. அவர் முதன் முதலாக நடித்த விளம்பரப் படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்ததைப் பற்றி அவரது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
“கொழுகொழு இளம் பெண்ணாக என்னுடைய முதல் விளம்பரப் படம் நடிகர் விவேக்குடன்... நீங்கள் மிகவும் அன்பானவர், அமைதியாக ஓய்வெடுங்கள் சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.