தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
மறைந்த நடிகர் விவேக்கிற்கு திரையுலகினர் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிலர் நேரிலும், பலர் சமூகவலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விவேக் உடன், ‛‛நந்தவன தேரு, விரலுக்கேத்த வீக்கம், மிடில்கிளாஸ் மாதவன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'' உள்ளிட்ட பல படங்களில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள். விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.
அதில் அவர் கூறுகையில், ‛‛என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அவனும், நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளோம். விவேக்கை பற்றி பேசும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன், உதவும் எண்ணம் கொண்டவன். ஐயா அப்துல் கலாம் உடன் நெருக்கமாக இருப்பான். விழிப்புணர்வு, மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். இரண்டு பேரும் உரிமையோடு என்னடா வடிவேலு, விவேக் என்று பேசிக் கொள்வோம். அவனை மாதிரி ஒளிமறைவு இல்லாமல் பேசக்கூடிய ஆளே கிடையாது.
கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியல, இந்த நேரத்தில் என்ன பேசுவது என்றே தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. நான் மதுரையில் என் அம்மா உடன் இருக்கிறேன். என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விவேக் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். அவன் எங்கும் செல்லவில்லை, உங்களுடன் தான் இருக்கிறான், மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்".
இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.