ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு அதன் பிறகு அரிமா நம்பி, இவன் வேறமாதிரி, சிகரம் தொடு, என தொடர் வெற்றிகளை கொடுத்தார். அதன்பிறகு துப்பாக்கிமுனை, வாகா, வானம் கொட்டட்டும் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது டாணாக்காரன், பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக அவர் நடித்த புலிக்குட்டி பாண்டி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பகையே காத்திரு என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்படிப்பு இன்று தொடங்குகிறது.
விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் சாய்குமார், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். காக்கி என்ற குறும்படத்தை இயக்கிய மணிவேல் இயக்குகிறார்.
படம் பற்றி மணிவேல் கூறியதாவது: விக்ரம் பிரபுவை மனிதில் வைத்து எழுதப்பட்ட கதை. இதற்கு முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாக அவரது கதாபாத்திரம் இருக்கும். அதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் கலந்த படம். சென்னை, கொச்சி, பொள்ளாச்சி, ஐதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. என்றார்.