ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசின் விருதை பெற்றார். தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் என்ற தெலுங்கு படங்களில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார்.
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தான் மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய்சேதுபதியாக நடித்து புகழ்பெற்றார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் புதிய கார் வாங்கிய மகேந்திரன், அதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்றுக் கொண்டார். இதை கேள்விப்பட்ட விஜய்சேதுபதி அவரது வீட்டுக்கே சென்று மகேந்திரனை வாழ்த்தினார். அவரை அருகில் உட்கார வைத்து காரோட்டி மகிழ்வித்தார்.