ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி, சென்னை-28 படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.. சினிமாவில் 15 வருடங்களை கடந்துவிட்ட ஜெய், தேர்தல் நாளான நேற்று தனது 38வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த பிறந்தநாளன்று அவரே எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாக நேரிலேயே வந்து, ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவை தனது துவக்க காலம் தொட்டே ஆதர்ச வழிகாட்டியாக, அண்ணனாக பின்பற்றி வரும் ஜெய், சிம்புவின் இந்த அதிரடி வருகையால் நெகிழ்ந்து விட்டார். இதுகுறித்து கூறியுள்ள ஜெய், “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான சந்தோசம் அளவிட முடியாதது. என்னுடைய பிறந்தநாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி” என கூறியுள்ளார் ஜெய்.
ஜெய்யின் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த வேட்டை மன்னன் படத்தில் அவரையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் சில நாட்களிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.