புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க ஆரம்பமான படம் 'துப்பறிவாளன் 2'. இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அதன்பின் படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் மிஷ்வின் படத்தை விட்டு விலகினார். அதன்பின் படத்தை தானே இயக்க விஷால் முடிவு செய்தார். ஆனால், அதன்பின் படத்திற்காக எந்தவிதமான படப்பிடிப்பும் நடக்கவில்லை.
மாறாக விஷால் 'சக்ரா' படத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட்டார். அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'எனிமி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய 31வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் அவர், 'துப்பறிவாளன் 2' படத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரே இயக்குவது வேலைப்பளுவைத் தான் தரும்.
விஷாலின் அடுத்த வெளியீடாக 'எனிமி' படம் தான் வரும். அதற்கடுத்து அவரின் 31வது படம் வரும். அதற்குப் பிறகு 'துப்பறிவாளன் 2' படத்தை அவர் மீண்டும் ஆரம்பிக்க மாட்டார் என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.