'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்ற பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகியவைதான் இடம் பெறும். மற்ற மொழித் திரைப்படங்களில் அவற்றை விட குறைவான சம்பளமே கிடைக்கும்.
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் 'பாகுபலி' படம் வரும் வரையில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இயக்குனர் ராஜமவுலி ஷங்கரை முந்திவிட்டார்.
ராஜமவுலிக்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம். 'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம் என தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. ஷங்கர் அடுத்து இயக்கும் தெலுங்குப் படத்திற்கும் அதே சம்பளம் பேசியிருக்கலாம், அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களில் கூட 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் மற்ற தென்னிந்திய நடிகர்களை மிஞ்சிவிட்டார். அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம், சில பல உரிமைகள் தரப்படுகின்றன.