விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கர்ணன்'. இப்படத்தின் பிரஸ்மீட் நடந்தது. தனுஷ் ஹாலிவுட்டில் படத்தில் நடிப்பதால் இதில் பங்கேற்கவில்லை. இதனால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இந்நேரம் உங்களுடன் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். கர்ணன் மிகவும் ஸ்பெஷலான படம். என்னை கர்ணனாக மாற்றிய மாரி செல்வராஜ், என் மேல் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து ஒரு நடிகனாக இன்னும் அதிகம் உழைக்கணும் என ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் நன்றி. தொடர்ந்து எனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன். கர்ணன் சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்'' என தெரிவித்துள்ளார்.