நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழில் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நயன்தாரா, மலையாளத்தில் நிழல் மற்றும் பாட்டு என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'நிழல்' படத்தின் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.. மிஸ்ட்ரி திரில்லராக இந்தப்படம் உருவாகிறது. பிரபல மலையாள எடிட்டரான அப்பு என்.பட்டாத்திரி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
தற்போது இந்தப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. மிஸ்ட்ரி த்ரில்லர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே டிரைலரையும் உருவாக்கியுள்ளனர். குறிப்பாக இந்தப்படடத்தில் ஆறேழு வயதுள்ள சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. அந்த இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என குஞ்சாக்கோ போபனே நயன்தாராவிடம் பேசி சம்மதிக்க வைத்தாராம். இப்படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர்.