புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் | இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னை பாக்ஸராக நடித்துள்ளார் ஆர்யா. இப்படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றினார். இதற்கான கடின பயிற்சியும் மேற்கொண்டார் ஆர்யா. இப்படத்தில் நடித்தவர்களின் கேரக்டர்கள், அதற்கு அவர்கள் தயாரான விதம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ லிங்க்கையும், ஆர்யாவின் போட்டோ ஒன்றையும் சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஆர்யாவின் மாமியார் சாகீன், ‛‛உங்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்தசாலித்தனம் ஆகியவற்றின் உச்சம் நீங்கள். என்றும் எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள், வேற லெவலுக்கு சென்றுள்ளீர்கள். என புகழ்ந்துள்ளார். இதற்கு ‛நன்றி அம்மா' என ஆர்யா பதில் கூறி உள்ளார்.