'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மஞ்சு வாரியர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இரண்டு இளைஞர்களுக்கு அம்மாவாக நடித்தார்.
நிஜ வாழ்க்கையிலும் அந்த அளவிற்கு வயதுடையவராக இருந்தாலும் இளமைத் தோற்றத்துடன், சிரிப்புடனும் இருப்பவர். இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அவரது ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட் அணிந்து பள்ளி மாணவி போன்ற தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மஞ்சு வாரியர் நடித்த தமிழ்ப் படமான 'அசுரன்', மலையாளப் படமான 'மரைக்காயர்' இரண்டு படங்களும் 67வது தேசிய விருதுகளை வென்ற படங்களாக அமைந்தன.
அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். “இந்த அற்புதமான இரண்டு பயணங்களில் தான் இருப்பது மகிழ்ச்சியும், பெருமையுமாக உள்ளது, தனுஷ் நீங்கள் உண்மையிலேயே இதற்குத் தகுதியானவர், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.