குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் சூரி உடனான பிரச்னை குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் : ‛‛கோர்ட்டில் இந்த பிரச்னை இருப்பதால் விரிவாக பேச முடியாது. இருப்பினும் எனக்கும், என் தந்தைக்கும் அந்த நிலப்பிரச்னையில் எந்த தொடர்பும் கிடையாது. சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன்பின் அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என் கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீதும் புகார் அளித்துள்ளார். ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை இல்லை. என் தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து போலீஸ் அதிகாரியாக உயர்ந்தவர். சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்வார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்தாண்டு பல படங்கள் வெளியாகிறது. புதிய படங்களும் ஒப்பந்தமாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது. கூடிய விரைவில் இந்திய பேட்மிட்டன் வீரர், ஜூவாலா கட்டாவுடன் திருமணம் நடக்கப்போகிறது. அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். எனக்கு காதல் மேல் நம்பிக்கை போய்விட்டது. இதற்கு மேல் காதலை தேடி நான் போகவில்லை. எனக்கும் ஜூவாலாவுக்கும் இருப்பது பரஸ்பர நம்பிக்கை.
‛ராட்சசன்' படத்தின் போது, என் சம்பளத்தில், 60 லட்ச ரூபாய் குறைத்தேன். அதை இன்று தான் வெளியே சொல்கிறேன். கொரோனாவால் பாதித்த தமிழ் திரையுலகிற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் ஜெயித்துக் காட்டுவேன்'' என்றார்.