சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா |
புதுடில்லி : 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக தனுஷ், துணை நடிகராக விஜய் சேதுபதி, சிறந்த இசையமைப்பாளராக விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமான் தேர்வாகி உள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தமிழில் கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு கிடைத்துள்ளது.
இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்னையால் 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்தாண்டு அறிவிக்கப்படவில்லை. தற்போது 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று(மார்ச் 22) அறிவித்துள்ளது. அதன்படி 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த நடிகர் இரண்டு பேர்
இந்தாண்டு சிறந்த நடிகர்களாக இரண்டு பேர் தேர்வாகி உள்ளனர். ஒருவர் அசுரன் படத்தில் நடித்த தனுஷ். மற்றொருவர் ஹிந்தியில் போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.
![]() |
2019ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அவற்றில் விருது வென்றவர்களும், சிறந்த திரைப்படங்களும் பற்றிய பட்டியல்..
சிறந்த பிராந்திய மொழித் திரைப்பட விருதுகள் (தென்னிந்திய மொழிகள் மட்டும்)
![]() |
பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, நடித்து, தயாரித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்காக சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அளவில்லா ஆனந்தம் - தாணு
அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ‛‛மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 1992ல் வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக பாலுமகேந்திரா மூலம் என் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அவரது வழியில் வந்த வெற்றிமாறன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு தேசிய விருது இப்போது கிடைத்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அளவில்லா ஆனந்தத்தில் திளைக்கிறேன். இந்த மாபெரும் வெற்றியை வெற்றிமாறனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.