பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் |
மைனா, கும்கி என இயற்கையின் பின்னணியில் படம் இயக்கிய பிரபுசாலமன் அடுத்து இயக்கி உள்ள படம் காடன். 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் தற்போதையை வாழ்வியல் தொடர்பானது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரபுசாலமன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு படத்திற்கும் நான் நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடும் ஒரு ஹீரோவை காட்ட விரும்பவில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல், காடுகள், நம்மை போலவே வாழும் உரிமை உள்ள விலங்குகள் இவற்றை பற்றி யார் பேசுவது. காடுகளில் யானையின் பங்கு மிகப்பெரியது. கும்கி எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் யானைகளின் நிலை என்ன என்பது குறித்து உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் காடன். இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இயற்கையை, சக உயிர்களை நேசிக்கிற அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.