‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சங்க வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்துது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். இதில் சங்க உறுப்பினர்களுடன் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திரையுலம் சந்தித்து வரும் பல பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தியேட்டர்களின் விபிஎப் கட்டணம், ஓடிடியில் படங்கள் வெளியீடு, பெப்சி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிடிவாதம் பிடிப்பதையும், விபிஎப் கட்டணத்தை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்தும் உறுப்பினர்கள் காரசாரமாக பேசினார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது : சினிமா இப்போது சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. தியேட்டர்காரர்கள் விபிஎப் கட்டணத்தை கட்டுவதாக இல்லை. ஓடிடி தளம் ஒன்றுதான் ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. அதையும் கூடாது என்று மறுக்கிறார்கள். இதுகுறித்து விரிவாக பேசினோம்.
தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை எப்படி வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம். அது அவர்கள் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அந்த சங்கத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்களை இந்த சங்கத்தில் இருந்து நீக்கவும் முடிவு செய்திருக்கிறோம். பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, விபிஎப் கட்டண பிரச்சினைகளை செயற்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்க தீர்மானித்துள்ளோம். என்றார்.




